புத்தாண்டில் அமெரிக்காவை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்: யார் இந்த சம்சுதீன் ஜாபர்?

By செய்திப்பிரிவு

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிக்அப் டிரக் மூலமாக நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர மேலும், இரண்டு இடங்களில் இதேபோன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவம் அமெரிக்க மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நியூ ஆர்லியன்ஸ் நகரில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட் சம்சுதீன் ஜாபர் (42) அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் என்பதை அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கண்டறிந்துள்ளது.

இதுகுறித்து எஃப்பிஐ கூறியுள்ளதாவது: கடந்த 2016-ம் ஆண்டு ஆர்லாண்டோ இரவு விடுதியில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர். அதேபாணியில் தான் புத்தாண்டில் தற்போது இந்த டிரக் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்குப் முன்பாக ஜாபர் தனது முகநூல் கணக்கிலிருந்து ஐந்து வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

இது, அவர் ஐஎஸ்எஸ் ஆதரவாளர் என்பதை உறுதிப்படுத்துகிறது. முதலில் அவர் தனது குடும்பம் மற்றும் நண்பர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால் அது தலைப்பு செய்திகளில் இடம்பெறாது என்பதால் இதுபோன்ற மிகப்பெரிய தாக்குதலை அவர் திட்டமிட்டு நிகழ்த்தியுள்ளார். ஜாபருக்கும், தீவிரவாத நெட்வொர்க்குக்கும் இதற்கு முன் தொடர்புகள் இருந்ததற்கான ஆதராங்கள் எதுவும் இல்லை. இதனால், இதுபோன்று தனிப்பட்ட முறையில் உளவியல் ரீதியில் உந்துதல் ஏற்பட்டு தன்னிச்சையாக தாக்குதல் நடத்துபவர்களை கண்டறிவது சவாலான பணியாக உள்ளது. இவ்வாறு எஃப்பிஐ தெரிவித்துள்ளது.

நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு இதுவரையில் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

3 hours ago

உலகம்

3 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

மேலும்