பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ‘உலகின் மிகப் பெரிய அணை’ கட்ட சீனா ஒப்புதல்

By செய்திப்பிரிவு

பீஜிங்: திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணையை எழுப்ப சீனா தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இந்தத் திட்டம் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.

பிரம்மபுத்திரா நதி, அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாக, வங்கதேசத்தின் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கும். இது உலகின் மிக நீண்ட நதிகளில் ஒன்று. திபெத் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, பிரம்மபுத்திரா தண்ணீரை வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடும் திட்டங்களை ஏற்கெனவே செயல்படுத்தி வருகிறது.

முன்னரே, மிகப் பெரிய அணையை பிரம்மபுத்திராவின் குறுக்கே கட்ட சீனா திட்டமிட்டிருந்தது. இதன்மூலம் உலகின் மிகப் பெரிய நீர்மின் திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடு செய்தது. இதையடுத்து, திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, உலகின் மிகப் பெரிய அணையை எழுப்ப சீனா தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் பிரம்மபுத்திரா மீது இந்தியா அணை கட்டுவது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த 137 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என கணிக்கப்படுகிறது. சீனாவின் இந்த முடிவு பிரம்மபுத்திரா நதியை நம்பியுள்ள இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய அணை கட்டுவதன் மூலம், உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நீர்வளத்தைப் பயன்படுத்தும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பிரம்மபுத்திரா நதி பாயும் நாடுகளான இந்தியா, வங்கதேசம் ஆகியவற்றுக்குச் செல்லும் நீரைத் தடுத்து நிறுத்தும்போது, சர்வதேசப் பிரச்சினையாக மாறலாம். பிரம்மபுத்திரா நதி நீரை நம்பியிருக்கும் நாடுகள் நலனுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட வேண்டும் என ஏற்கெனவே சீன அரசிடம் இந்திய அரசு சார்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இப்போது சீனா இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து சீனா சார்பில் திபெத்தில் 1500 கோடி டாலர் மதிப்பில் ஜாங்மு நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர டாகு, ஜீக்ஸ், ஜியாச்சா ஆகிய பகுதிகளிலும் அணைகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

மேலும்