புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று குவைத் சென்றார். அந்த நாட்டு துணை பிரதமர் மற்றும் இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேற்கு ஆசியாவில் குவைத் நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டின் மக்கள் தொகை 43 லட்சம் ஆகும். இதில் இந்திய வம்சாவளியினர் சுமார் 10 லட்சம் ஆகும். அதோடு சுமார் 9 லட்சம் இந்திய தொழிலாளர்கள் குவைத்தில் பணியாற்றி வருகின்றனர்.
மத்திய கிழக்கில் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவுதி அரேபியா, ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பலமுறை பயணம் செய்துள்ளார். ஆனால் குவைத்துக்கு இதுவரை அவர் செல்லவில்லை. கடந்த 2022-ம் ஆண்டில் அவர் குவைத் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலித்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து குவைத் வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா அலி அண்மையில் அரசு முறை பயணமாக டெல்லி வந்திருந்தார். அப்போது குவைத் வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக பிரதமர் முகமது சபா அல் சலேமின் எழுதிய கடிதத்தை அவர் அளித்தார்.
» வங்கி கடன் மோசடி வழக்கில்: அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேருக்கு சிறை தண்டனை
» மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படுவார்கள்: ஜடேஜா நம்பிக்கை
குவைத் அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்கள் அரசு பயணமாக நேற்று அந்த நாட்டுக்கு சென்றார். தலைநகர் குவைத் சிட்டியில் தரையிறங்கிய அவரை, துணை பிரதமர் ஷேக் பகாத் யூசுப் வரவேற்றார். பெருந்திரளான இந்திய வம்சாவளியினர் விமான நிலையத்தில் திரண்டு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடந்த 1981-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சென்றார். இதன்பின் 43 ஆண்டுகளுக்கு பிறகு குவைத் செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார். குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல் அகமது, பிரதமர் முகமது சபா அல் சலேம் ஆகியோரை இந்திய பிரதமர் சந்தித்து பேச உள்ளார். இந்த பயணத்தின்போது வர்த்தகம், முதலீடு, கல்வி, விவசாயம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, கலாச்சாரம் தொடர்பாக இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குவைத் பயணம் குறித்து பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல் அகமதுவின் அழைப்பை ஏற்று அந்த நாட்டுக்கு செல்கிறேன். இரு நாடுகளிடையே வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் வலுவான உறவு நீடிக்கிறது. அதோடு மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றை பாதுகாக்க இரு நாடுகளும் உறுதிபூண்டு உள்ளன. குவைத் மன்னர், பட்டத்து இளவரசர், பிரதமரை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். இந்திய வம்சாவளியினரை சந்திப்பதை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
வளைகுடா பிராந்தியத்தின் முதன்மையான விளையாட்டு நிகழ்வான அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிற்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்த குவைத் தலைமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பயணம், இந்திய - குவைத் மக்களுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
101 வயது அதிகாரியுடன் சந்திப்பு: இந்திய வெளியுறவு துறையில் பணி யாற்றியவர் ஐஎஃப்எஸ் அதிகாரி மங்கள் சைன் ஹந்தா. 101 வயதாகும் அவர் தற்போது குவைத்தில் வசிக்கிறார். குவைத் வரும் பிரதமர் மோடியை சந் திக்க ஆர்வமாக இருப்பதாக குடும்பத் தினரிடம் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஹந்தாவின் பேத்தி ஸ்ரேயா, சமூக வலைதளம் மூலம் பிரதமரிடம் வேண்டு கோள் விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, குவைத் சிட்டியில் நேற்று ஹந்தாவை சந்தித்து பேசினார்.
43 ஆண்டுகளுக்கு பிறகு.. கடந்த 1981-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சென்றார். 43 ஆண்டுகளுக்கு பிறகு குவைத் சென்ற இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
இந்த பயணத்தின்போது, குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல் அகமது. பிரத மர் முகமது சபா அல் சலேம் ஆகியோரை மோடிசந்திக்கிறார். இரு நாடுகள் இடையே வர்த்தகம், முதலீடு. கல்வி. விவசாயம். தொழில்நுட்பம், பாதுகாப்பு, கலாச்சாரம் தொடர்பாக பல ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago