டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு புரட்சி வெடித்தது. ஆசாத் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்றது. இதில் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 27-ம் தேதி சிரியா ராணுவத்துக்கு எதிராக மிகப்பெரிய போரை துருக்கி ஆதரவு பெற்ற எச்டிஎஸ் கிளர்ச்சிப் படை தொடங்கியது. அதேநேரம், ஈரானும், ரஷ்யாவும் ஆதரவு தராததால் ஆசாத் தலைமையிலான சிரியா ராணுவம் பின்னடைவை சந்தித்தது. இதனால் முக்கிய நகரங் களை கைப்பற்றிய எச்டிஎஸ் வீரர்கள், தலைநகர் டமாஸ்கஸை கடந்த 8-ம் தேதி கைப்பற்றினர். இதையடுத்து, ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றார். இந்நிலையில், பஷார் அல் ஆசாத் ரூ.2 ஆயிரம் கோடியை ரஷ்யாவுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகையை கடந்த 2018 மற்றும் 2019 காலகட்டத்தில் ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாஸ்கோவின் நுகோவோ விமான நிலையம் சென்றடைந்த கரன்சிகள் அந்நாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாகவும், ஆசாத்தின் உறவினர்கள் இதே காலத்தில் ரஷ்யாவில் ரகசியமாக சொத்துகளை வாங்கியதாவும் தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
18 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago