வங்கதேசத்தில் இந்து துறவிக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக முன்வராததால் ஜன.2-க்கு வழக்கு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

டாக்கா: வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பில் வாதிட வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் விசாரணை ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, பதவி விலகியதில் இருந்து அங்குள்ள இந்துக்களுக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த சின்மோய் கிருஷ்ண தாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த நவம்பர் 25ம் தேதி டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். நவம்பர் 26ம் தேதி சட்டோகிராம் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. அவரது வழக்கறிஞர்கள் உடனடியாக மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். ஆனால், அன்றைய தினம் விசாரணை நடைபெறவில்லை.

சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நடந்த வன்முறையில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து, சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆஜராக வழக்கறிஞர்கள் சங்கம் தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக, சின்மோய் கிருஷ்ண தாசின் வழக்கு சட்டோகிராம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. எனினும், அவருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 2-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக செயல்பட்ட ராமன் ராய் என்ற வழக்கறிஞர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராதாரம் தாஸ் கூறியுள்ளார். சின்மோய் கிருஷ்ண தாசுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக இருக்கும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வங்கதேச அரசிடம் இஸ்கான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

17 கோடி மக்கள் தொகை கொண்ட வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் 8 சதவீதம் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் இந்துக்களுக்கு எதிராக நடந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. சிறுபான்மையினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வங்கதேச அரசை வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்