மலேசியாவை புரட்டிப்போட்ட வெள்ளம்: 4 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கோலாலம்பூர்: மலேசியாவில் இந்த வாரம் பெய்த கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டடுள்ளது. மேலும், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலேசியாவில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலேசியாவில் கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தால் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த ஒரு வாரத்தில், ஏழு மாநிலங்களில் உள்ள 80,589 பேர், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 467 தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது. பலியானவர்கள் குறித்தான எந்தவொரு தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

இதுவரை மலேசியாவில் 2014ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளமே மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அதைவிட மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், மீட்புப் படகுகள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் வெள்ளம் பாதித்த மாநிலங்களில் ஆயிரக்கணக்கான அவசர சேவை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவரான ஜாஹித் கூறினார். சனிக்கிழமை வரை எட்டு மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்