இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரன்ட் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

தி ஹேக் (நெதர்லாந்து): இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.

2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் கிளிர்ச்சியாளர்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேலியர்கள் உள்பட சிலர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். பிணைக் கைதிகளில் சொற்பமானவர்களே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், காசா மீது இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. காசா மீதான தாக்குதல் ஹமாஸ் ஆதரவு அமைப்புகள் மீது நீண்டுள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லாக்கள், சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்சிப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசாவில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உள்பட 44,000 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனான் உயிர்ழப்புகள் 3,500-ஐ கடந்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன்வைக்கப்பட்டு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில்தான் இப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

அதேபோல இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டுக்கு எதிராகவும் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. போர்க் குற்றச்சாட்டுகள் நிமித்தமாக, குறிப்பாக உயிரிழப்புகள் தொடர்பாக இஸ்ரேல் அளித்த விளக்கங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்