நியூசிலாந்தின் மவோரி பழங்குடிகளுக்கும் பிரிட்டன் அரசுக்கும் இடையேயான பாரம்பரிய ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பழங்குடியின பெண் எம்.பி. ஹானா தலைமையில் மவோரி எம்.பி.க்கள் பாரம்பரிய பாடல், நடனம் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் பழங்குடியினப் பாடலும், அதற்கேற்ற ஆவேச நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிரவைத்தது. அவர்களின் உரிமைப் பாடலை செய்வதறியாது கவனித்துவந்த சபாநாயகர் பின்னர் மவோரி எம்.பி.க்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.
வைதாங்கி ஒப்பந்தம் - முன்னதாக, 1840-ல் பிரிட்டன் அரசு பிரதிநிதிகளுக்கும், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருக்கும் பூர்வக்குடிகளாக அறியப்படும் மாவோரி தலைவர்களுக்கும் இடையே ‘வைதாங்கி ஒப்பந்தம்’ (Treaty of Waitangi) மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவோரி பூர்வக்குடிகளுக்கு சில சலுகைகளும், உரிமைகளையும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு டி பாடி மவோரி ( Te Pati Maori ) கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் இளம் எம்.பி. ஹானா பழங்குடி பாடலுடன் மசோதா நகலை கிழித்தெறிந்து அவையின் நடுவே வந்து போராட்ட முழக்கம் எழுப்ப அவருடன் பிற மவோரி எம்.பி.க்களும் இணைந்து கொண்டனர்.
அவர்களின் பழங்குடியினப் பாடலும், அதற்கேற்ற ஆவேச நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிரவைத்தது. அவர்களின் உரிமைப் பாடலை செய்வதறியாது கவனித்துவந்த சபாநாயகர் பின்னர் மவோரி எம்.பி.க்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.
ஏற்கெனவே உலகமறிந்த ஹானா! - நியூசிலாந்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 54-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேசிய கட்சியினர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். இதனிடையே, அங்குள்ள டி பாடி மவோரி கட்சியைச் சேர்ந்த 6 பேர் எம்.பி.களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க் ஒருவர். 21 வயதேயான இவர் கடந்த 1853-லிருந்து நியூசிலாந்து வரலாற்றில் மிக இளம் வயதில் எம்.பி. ஆனவர் என்ற பெருமையை பெற்றவராவார்.
ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க்கின் முதல் நாடாளுமன்ற உரை அவரை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது. தனது பேச்சினுடே மவோரி இனத்தின் போர் பாடலைப் பாடி நாடாளுமன்றத்தை அதிர வைத்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
3 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago