அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக துளசி கப்பார்ட் நியமனம்: ட்ரம்ப் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புளோரிடா: அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் உளவுத்துறை இயக்குநராக துளசி கப்பார்டை தேர்வு செய்துள்ளார்.

“துளசி குறித்து நான் அறிவேன். அவரது அச்சமற்ற மனப்பான்மையை நமது உளவுத்துறைக்கு கொண்டு வருவார் என்று நம்புகிறேன். நமது அரசியலமைப்பு உரிமைகளை வென்றெடுப்பார், அமைதியை நிலைநாட்டுவார்.” என ட்ரம்ப் கூறியதாக அமெரிக்க நாட்டு ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப், தனது இரண்டாவது ஆட்சியில் நிர்வாக பொறுப்புகளை கவனிப்பவர்கள் குறித்த அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் துளசி கப்பார்டை உளவுத்துறை இயக்குநராக அவர் அறிவித்துள்ளார்.

யார் இவர்? - 43 வயதான துளசி கப்பார்ட் அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அல்ல. கடந்த 1981-ல் அமெரிக்காவில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் இந்து மதத்துக்கு மதம் மாறியுள்ளனர். அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி உள்ளார்.

கடந்த 2022-ல் ஜனநாயக கட்சியில் இருந்து விலகினார். நடப்பு ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்புக்கு ஆதரவாக பேசினார். தனது பரப்புரையில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸை விமர்சித்தார். அது ட்ரம்ப் வெற்றிக்கு உதவியது. இந்நிலையில், உளவுத்துறை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்