லண்டன்: மைசூர் மன்னர் திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேய கிழக்கிந்திய படைகளுக்கும் இடையே ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் கடந்த 1799-ம் ஆண்டு நடந்த போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். இந்த போரில் திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள் ஆங்கிலேயர்களிடம் சிக்கியது.
ஸ்ரீரங்கப்பட்டிணம் போரில் ஆங்கிலேய படையின் கேப்டனாக செயல்பட்ட ஜேம்ஸ் ஆண்ட்ரு டிக்என்பவரின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் திப்பு சுல்தானின் வாள் பரிசாக அளிக்கப்பட்டது.
அந்த வாளில் புலியின் வரி மற்றும் அரபு மொழியின் ‘ஹா’ என்ற எழுத்தும் பொறிக்கப்பட்டிருந்தது. ‘ஹ’ என்ற எழுத்து திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியை குறிக்கும் அடையாளம். 2024-ம் ஆண்டு ஜுன் வரை திப்பு சுல்தானின் வாள் ஜேம்ஸ் ஆண்ட்ரு டிக் குடும்பத்தாரிடம் இருந்தது.
தற்போது லண்டனில் உள்ள பான்ஹாம்ஸ் ஏல மையத்தில் அந்த வாள் ரூ.3.4 கோடிக்கு கடந்த செவ்வாய்க் கிழமை விற்கப்பட்டது. இதேபோல் ஸ்ரீரங்கப்பட்டிணம் முற்றுகையில் பங்கேற்ற பீட்டர் செர்ரி என்பவருக்கு அளிக்கப்பட்ட வெள்ளி பதக்கம் ரூ.24 லட்சத்துக்கு ஏலம் போனது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago