அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2021-ம் நிதியாண்டில் அமெரிக்க அரசிடம் 4,330 இந்தியர்கள் அடைக்கலம் கோரி விண்ணப்பம் செய்த நிலையில் 2023-ம் நிதியாண்டில் இது 41,330 ஆக, அதாவது 855 சதவீதம் (எட்டைரை மடங்குக்கு மேல்) உயர்ந்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களில் ஏறக்குறைய பாதி பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது எப்படியாவது அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்ற இந்தியர்களின் தீராத ஆவலை காட்டுகிறது.
கடந்த 2012-ம் நிதியாண்டில் 1,330 இந்தியர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு அமெரிக்கா அடைக்கலம் வழங்கியுள்ளது. இந்த எண்ணிக்கை 2022-ல் 4,260 ஆக, அதாவது 3 மடங்கு உயர்ந்துள்ளது. 2023-ல் இது மேலும் உயர்ந்து 5,340 இந்தியர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை கடந்த அக்டோபரில் வெளியிட்ட அடைக்கலம் பெற்றவர்கள் குறித்த ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago