கனடாவில் வாழும் சீக்கியர்கள் அனைவருமே காலிஸ்தான் ஆதரவாளர்கள் அல்ல: ட்ரூடோ விளக்கம்

By செய்திப்பிரிவு

ஒட்டவா: கனடாவில் உள்ள அனைத்து சீக்கியர்களும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அல்ல என்றும், பிரதமர் மோடி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்த இந்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவது இல்லை என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடா நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, "கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதேபோல், கனடாவில் பிரதமர் மோடியின் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் கனடாவில் உள்ள அனைத்து இந்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டுள்ளார். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதை அடுத்து இந்த விவகாரம் குறித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்திய அரசு நிறுவனங்களுக்கு "சாத்தியமான" தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி இருந்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது.

ட்ரூடோவின் இந்த குற்றச்சாட்டுகளை "அபத்தமானது" என்று இந்தியா நிராகரித்தது. மேலும், கனடா அரசால் குறிவைக்கப்பட்ட அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்துக்கொண்டது. அதோடு, இந்தியாவில் உள்ள 6 கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. கனேடிய மண்ணில் இருந்து செயல்படும் காலிஸ்தான் ஆதரவு சக்திகளுக்கு கனடா இடம் கொடுப்பதுதான் இரு நாடுகளுக்கும் இடையேயான முக்கியப் பிரச்சினை என்று இந்தியா கூறி வருகிறது.

கடந்த வாரம், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயில் மீது காலிஸ்தானி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை ட்ரூடோ கண்டித்தார். ஒவ்வொரு கனடியரும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு என அவர் கூறினார். இந்த நிகழ்வை அடுத்து, கனடாவில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து புதுடெல்லி "ஆழ்ந்த கவலை" கொண்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

உரிய பாதுகாப்பு வழங்க கனேடிய அரசு அமைப்புகள் முன்வராததால் இந்த மாதம் திட்டமிடப்பட்ட சில தூதரக நிகழ்வுகளை ரத்து செய்வதாக டொராண்டோவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்