16 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக வலைதள பயன்பாட்டை தடை செய்யும் மசோதா: ஆஸ்திரேலியா திட்டம்

By செய்திப்பிரிவு

சிட்னி: 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் இருந்து தடை செய்யும் சட்ட மசோதாவை அறிமுகம் செய்ய உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இதனை அந்நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதி செய்துள்ளார். அடுத்த வாரம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தீங்கிழைக்கும் சமூக வலைதளங்களில் இருந்து நம் குழந்தைகளை பாதுகாப்பது இதன் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த சட்ட மசோதா பெரிய அளவில் விவாதங்களை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பிரதமர் அந்தோணி அல்பானீஸ் “இது பெற்றோருகளுக்கானது. சமூக வலைதளத்தில் மூழ்கி இருக்கும் குழந்தைகளை எண்ணி வாட்டம் கொண்டுள்ள என்னைப் போலவே உள்ள பெரும்பாலான பெற்றோர்களுக்கானது இது. ஆஸ்திரேலிய குடும்பங்களின் பக்கம் அரசு எப்போதும் நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களின் அனுமதியை பெற்றிருந்தாலும் வயது சார்ந்த எந்தவித தளர்வும் இதில் இருக்காது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது. ‘eSafety கமிஷனர்’ தரப்பில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சட்டம் நிறைவேற்றப்பட்ட 12 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வரும். மேலும், இதனை மறு ஆய்வு செய்யும் திட்டமும் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதினரை சமூக வலைதள பயன்பாடு மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக பலரும் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் டிக்டோக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களை இளம் வயதினர் பயன்படுத்துவதை இது சற்றே தாமதப்படுத்துகிறது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தடைக்கு மாறாக ஆன்லைன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை அவர்களிடத்தில் ஏற்படுத்தலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட இளம் வயதினர் மத்தியில் சமூக வலைதள பயன்பாட்டை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளது. அதே நேரத்தில் டெக் நிறுவனங்கள் இது மாதிரியான தடைகளை எதிர்த்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. வயது சரிபார்ப்புத் (ஏஜ் வெரிபிகேஷன்) தேவைகளைத் தவிர்க்கக்கூடிய வழிகளும் இருப்பதால் இது எப்படி நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

17 mins ago

உலகம்

1 hour ago

உலகம்

18 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்