கிரிக்கெட் உலகில் கொண்டாடப்படும் தோனியும், அமெரிக்க அதிபராக பதவியேற்கப் போகும் ட்ரம்பும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
கடந்த 2023-ல் அமெரிக்கா சென்றிருந்தார் எம்.எஸ்.தோனி. அப்போது தோனியை, கோல்ஃப் விளையாட வருமாறு முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோனியை அழைத்திருந்தார். அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் டொனால்டு ட்ரம்ப், தோனியின் அமெரிக்க வருகையை தெரிந்துகொண்டு அவரை கோல்ஃப் விளையாட அழைத்துள்ளார்.
அவரது அழைப்பை ஏற்று பெட்மின்ஸ்டர் பகுதியிலுள்ள ட்ரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப்புக்கு தோனி வந்தார். அப்போது ட்ரம்புடன் இணைந்து தோனி சிறிது நேரம் கோல்ஃப் விளையாட்டில் பங்கேற்றார். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம், தற்போது அதிபர் தேர்தல் வெற்றிக்கொண்டாட்டத்தையொட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது ட்ரம்புக்கு அலாதிப் பிரியம் உண்டு. இவர் ஏற்கெனவே சுனில் காவஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட வீரர்களை புகழ்ந்து பேசி இருக்கிறார். இவர்கள் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்று அவர் அப்போது புகழாரம் சூட்டியிருந்தார். தோனியின் மீது கொண்ட அளவிலான அன்பால் அவரையும் அப்போது பாராட்டிப் பேசியிருந்தார் ட்ரம்ப்.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago