அமெரிக்க அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு!

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் அப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டனர். இதில் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானார்.

தற்போதைய அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகின்றனர். ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த சூழலில் அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் இன்று காலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 5.30 மணி) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. முன்னாள் அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் ஃப்ளோரிடா மாகாணத்தில் தனது வாக்கை செலுத்தினார். முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா அனைவரும் சென்று வாக்களிக்குமாறு தனது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

50 மாகாணங்களிலும் அமெரிக்க மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். சுமார் 95 சதவீத இடங்களில் வாக்குச்சீட்டு நடைமுறையிலும், மீதமுள்ள 5 சதவீத இடங்களில் மின்னணு முறையிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உள்ளது. இதன்படி வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே 8.2 கோடி பேர் வாக்களித்துவிட்டனர். அதாவது 40 சதவீதம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர். மீதமுள்ள வாக்காளர்கள் தற்போது வாக்களித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்' (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள்.

சிறிய மாகாணங்களில் 1 முதல் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வரை வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும். ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றால், அந்த மாகாணத்தின் ‘எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் முழுவதும் வெற்றி வேட்பாளரை சென்றடையும்.

வாக்குப் பதிவு இரவு 7 மணிக்கு (இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.30 மணி) நிறைவடையும். இதைத் தொடர்ந்து மாகாணவாரியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி நாளையே முடிவுகள் தெரியவரக்கூடும். குறிப்பிட்ட மாகாணங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் இடையிலான வாக்கு சதவீதம் குறைவாக இருந்தால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

13 mins ago

உலகம்

2 hours ago

உலகம்

3 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்