அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்புகள்: கமலா ஹாரிஸுக்கு குறையும் ஆதரவு

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரெம்பும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவந்துள்ளன. இதில் கமலா ஹாரிஸுக்கு 44 சதவீத மக்களும், டொனால்ட் ட்ரெம்புக்கு 43 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராய்ட்டர் நிறுவனம் மற்றும் ஐபிஎஸ்ஓஎஸ் அமைப்பு இணைந்து, கடந்த வெள்ளி முதல் ஞாயிறு வரையில் 3 நாள் தேர்தல் கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. அமெரிக்க முழுவதும் 1,150 இளம் வாக்காளர்களிடையே இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை தற்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் கமலா ஹாரிஸ் தேர்தல் களத்தில் இறங்கியபோது அவருக்கு ஆதரவு அதிகம் இருந்தது. ஆனால், செப்டம்பருக்கு பிறகு அவருக்கான ஆதரவு குறையத் தொடங்கியுள்ளது என்பது தற்போதைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தற்போதைய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸூக்கு 44 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது ட்ரெம்புக்கான ஆதரவை விட 1 சதவீதம்தான் அதிகம் ஆகும். அக்டோபரில் நடத்தப்பட்ட முந்தைய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் 2 சதவீதம் முன்னிலையில் இருந்தார்.

அமெரிக்காவின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு உருவாக்கம் சார்ந்து யாருடைய அணுகுமுறை சிறப்பாக உள்ளது என்று கேட்கப்பட்டதற்கு 47 சதவீதம் பேர் ட்ரெம்பைக் குறிப்பிட்டுள்ளனர். 37 சதவீதம் பேர் கமலா ஹாரிஸைக் குறிபிட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனநாயகம், அரசியல் பிரச்சினைகளை கையாளுவதில் சிறந்து விளங்குவதாக கமலா ஹாரிஸுக்கு 40 சதவீதம் பேரும் ட்ரெம்புக்கு 38 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். முந்தைய கருத்துக் கணிப்பில் இந்தப் பிரிவில் கமலா ஹாரிஸ், ட்ரெம்பைவிட 7 புள்ளிகள் முன்னிலையில் இருந்தார். ஆனால், இம்முறை 2 புள்ளிகள் மட்டுமே முன்னிலையில் உள்ளார். அகதிகள் பிரச்சினையை கையாளுவதில் ட்ரெம்ப் அணுகுமுறை சிறப்பாக இருப்பதாக 48 சதவீதம் பேரும், கமலா ஹாரிஸுக்கு 33 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்