இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் காசாவில் 77 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

காசா: இஸ்ரேல் ராணுவம் காசாவில் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 77 பேர் உயிரிழந்தனர். 150 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,400-க்கும் மேற்
பட்டோர் உயிரிழந்தனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். 3,500 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக காசா பகுதிகளில் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தரை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையே சுமார் ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.

இந்த சூழலில் காசாவின் பீட்லாஹியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. அந்த குடியிருப்பை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. இதில் 5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தில் நூற்றுக்கணக்கானோர் இருந்தனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் 20 குழந்தைகள் உட்பட 77 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்
டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காசாவில் சுமார் 23 லட்சம் பேர் வசிக்கின்றனர். இஸ்ரேல் ராணுவ தாக்குதலால் சுமார் 80 சதவீதம் பேர் இடம்பெயர்ந்து உள்ளனர். இதுவரை 43,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு ஐ.நா. நிவாரண அமைப்பு உதவிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பின் தன்னார்வலர்கள், ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்காக திரைமறைவில் செயல்பட்டு வருகின்றனர் என்று இஸ்ரேல் அரசு குற்றம் சாட்டி வருகிறது.

ஐ.நா. அமைப்புக்கு தடை: இதன் காரணமாக ஐ.நா. நிவாரண அமைப்புக்கு இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பான புதிய சட்டம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் அடுத்த 90 நாட்களில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சட்டத்தால் காசா பகுதிமக்கள் உணவு, குடிநீர் இன்றி பரிதவிக்கும் நிலை ஏற்படும் என்று தன்னார்வ தொண்டு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

11 days ago

உலகம்

12 days ago

மேலும்