யேமன் ராணுவத்தினர் 14 பேரின் தலையை துண்டித்த அல் காய்தா

யேமன் ராணுவத்தினர் சென்று கொண்டிருந்த வாகனத்தின்மீது திடீர்த் தாக்குதல் நடத்தி அதில் இருந்த 14 வீரர்களின் தலைகளை வெட்டிக் கொன்றுள்ளது அல் காய்தா தீவிரவாத அமைப்பு.

யேமன் நாட்டில் ஹட்ராமவுட் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவத் தினர் 14 பேர் ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அல் காய்தா தீவிரவாதிகள் அந்த வாகனத்தைத் தாக்கினர். அதன்பிறகு அவர்களின் தலைகளை வெட்டிக் கொன்று ள்ளனர். கொல்லப்பட்ட ராணுவ வீரர் களின் உடல்களைக் கைப்பற்றி யிருப்பதாக ஏமன் அரசு தெரிவித் துள்ளது.

அல் காய்தா எதிர்ப்பு நடவடிக்கை

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அல் காய்தாவுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்தி வருகிறது ஏமன் அரசு. அதன் காரணமாக அந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பலர் கொல் லப்பட்டுள்ளனர். கடந்த வியாழக் கிழமை அல் காய்தா தீவிரவாதி களுக்கும் ராணுவத் தினருக்கும் நடைபெற்ற மோதலில் 7 அல் காய்தா தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்.

அரேபியன் தீபகற்பத்தில் இருக்கும் அல் காய்தா எனும் இந்தத் தீவிரவாத அமைப்பு ஏமனில் அன்சார் அல் ஷரியா என்றும் அழைக்கப்படுகிறது. 2009ம் ஆண்டில் தலையெடுக்க ஆரம் பித்த இந்த அமைப்பு ஏமன் மற்றும் சவுதி அரேபிய அரசுகளுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

4 hours ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்