இலங்கை மண்ணில் இந்தியாவுக்கு எதிரான செயலை அனுமதிக்க மாட்டோம்: புதிய அதிபர் திசநாயக்க உறுதி

By செய்திப்பிரிவு

கொழும்பு: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர்அநுர திசநாயக்கை நேற்று முன்தினம் அவர் சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பொருளாதார உதவிமிக முக்கியமானது என்று அநுர திசநாயக்க தெரிவித்த நிலையில், இலங்கையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து பங்களிப்பையும் இந்தியா வழங்கும் என்று ஜெய்சங்கர் உறுதியளித்தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பு குறித்து மத்தியஅரசு வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா - இலங்கை இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது. இலங்கை மண்ணில் இந்தியாவுக்கு எதிரான எந்த செயல்பாடுகளையும் அனுமதிக்க மாட்டோம் என்று திசநாயக்க தெரிவித்தார். இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியா உதவும் என்று ஜெய்சங்கர்உறுதியளித்தார். இந்தச் சந்திப்பின்போது, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் ஜெய்சங்கர் முன்வைத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்