பாங்காங்: தாய்லாந்தில் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து நேற்று தீப்பற்றிய விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாய்லாந்தின் மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து பள்ளிமாணவர்கள் நேற்று பேருந்தில் கல்விச் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். பேருந்தில் 6 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 44 பேர் இருந்தனர். இந்நிலையில் கு கோட்நகரில் உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணியளவில் இந்தப் பேருந்து தீப்பற்றியது. பேருந்தில் தீ மளமளவென பரவியதில் 20 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், “தொடக்க மற்றும்நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இந்தப் பேருந்தில் வந்துள்ளனர். தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். 16 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விபத்துக் கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி விசாரித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.
பேருந்து தீப்பற்றியதை தொடர்ந்து அதன் ஓட்டுநர் வெளியேகுதித்து உயிர் தப்பினார். தலைமறைவான அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இதுகுறித்து தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா எக்ஸ் தளத்தில்வெளியிட்டுள்ள பதிவில், “பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குஎனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசு ஏற்கும்’’ என கூறியுள்ளார்.
» உற்பத்தி துறை வேலைவாய்ப்பு 7.6% அதிகரிப்பு
» மும்பை இசைக் கச்சேரிக்கு கடும் போட்டி: கள்ள சந்தையில் ஒரு டிக்கெட் ரூ.10 லட்சம் வரை விற்பனை
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago