ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 7 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கான் போலீஸ் தரப்பில், 'ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள காபூlல் பாலிடெக்னிக் பல்கலைகழகத்தின் அருகே இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் இருவர் போலீஸார்”என்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தாலிபன்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நிகழ்த்தி இருக்கலாம் என்று ஆப்கான் போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்
ஆப்கானிஸ்தானில் அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கு தலிபான் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேர்தலைச் சீர்குலைக்கவே இம்மாதிரியான தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக ஆப்கன் அரசு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago