கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: போலீஸ் விசாரணை

By செய்திப்பிரிவு

டெம்பே: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நாட்டின் அரிசோனாவில் அமைந்துள்ள டெம்பே நகரில் உள்ள ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் இது நடந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இரண்டு தரப்பும் தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரச்சாரத்தில் பங்கேற்று வருகின்றனர்.

முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் மீது இரண்டு முறை கொலை முயற்சி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல் முறை நடத்தப்பட்ட தாக்குதலில் ட்ரம்ப்பின் காது பகுதியை துப்பாக்கி குண்டு உரசியது. அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இரண்டாவது முறை நடந்த தாக்குதலில் அவர் காயமின்றி தப்பினார். இந்தச் சூழலில் கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சார அலுவலகம் குறி வைக்கப்பட்டுள்ளது.

டெம்பே சிட்டியில் அமைந்துள்ள அலுவலகத்தில் ஒரு மாத காலத்துக்குள் நடந்துள்ள இரண்டாவது துப்பாக்கிச்சூடு தாக்குதல் இது. அமெரிக்க நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் போலீஸ் தரப்பில் தாக்குதலை உறுதி செய்ததாக தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியின் அலுவலகத்தின் முகப்பு பகுதியில் உள்ள கதவு மற்றும் ஜன்னலை துப்பாக்கி தோட்டா துளைத்துள்ளது. அது தொடர்பாக காட்சிகளை உள்ளூர் செய்தி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. சம்பவம் நடந்த போது அலுவலகத்தில் யாரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் யாரும் காயமடையவில்லை என்றும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தாக்குதலை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியினை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது. ‘இந்த வன்முறை செயல் எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது’ என ஜனநாயக கட்சியின் அரிசோனா மாகாண நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் வெள்ளிக்கிழமை அரிசோனாவுக்கு கமலா ஹாரிஸ் வருகை தர உள்ளார். இந்தப் பயணத்தின் போது அமெரிக்கா - மெக்சிக்கோ எல்லை பகுதிக்கு அவர் செல்ல உள்ளார். இந்நிலையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

1 hour ago

உலகம்

4 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

மேலும்