லெபனானில் பேஜர் தாக்குதலில் தொடர்புடைய 7 மொழி தெரிந்த பெண் சிஇஓ தலைமறைவு

By செய்திப்பிரிவு

புடாபெஸ்ட்: லெபனானில் பேஜர் தாக்குதலில் தொடர்புடைய பிஏசி கன்சல்டிங் நிறுவனத்தின் பெண் சிஇஓ கிறிஸ்டியானா பார்சோனி தலைமறைவாகியுள்ளார்.

லெபனானில் சில தினங்களுக்கு முன்பு, ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் திடீரென்று ஒரேநேரத்தில் வெடித்தது. இதில், 31 பேர் உயிரிழந்ததாகவும் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பேஜர் தாக்குதலுக்கு பின்னால், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இருப்பது தெரியவந்தது.

இஸ்ரேல் உளவு அமைப்பின் கண்காணிப்பிலிருந்து தப்பிப்பதற்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் ஸ்மார்ட்போன்களுக்குப் பதிலாகபேஜர் பயன்படுத்தி வந்தனர். இதையறிந்த இஸ்ரேல் உளவுத் துறை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், பேஜர் தயாரிப்புக்காக 3 போலி நிறுவனங்களை தொடங்கியது. அதில் ஒரு நிறுவனமான பிஏசிகன்சல்டிங், தைவான் நாட்டின்கோல்ட் அப்பல்லோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பேஜர்களை தயாரித்து வந்தது. இந்தப் பேஜர்களின் உட்பகுதியில் 3 கிராம் எடையுள்ள வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டன.

இந்நிறுவனத்திடமிருந்து ஹிஸ்புல்லா அமைப்பு 5 ஆயிரம் பேஜர்களை வாங்கியது. திட்டமிட்டபடி, மொசாட் அமைப்பு அந்தப் பேஜர்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில், பிஏசி கன்சல்டிங் நிறுவனத்தின் பெண் சிஇஓ கிறிஸ்டியானா பார்சோனி தலைமறைவாகியுள்ளார். கிறிஸ்டியானா இத்தாலியில் பிறந்து ஹங்கேரிக்கு புலம்பெயர்ந்தார். அவருக்கு 7 மொழி தெரியும் என்று கூறப்படுகிறது. அவர் எந்த ஒரு வேலையிலும் நிரந்தரமாக இருப்பவர் இல்லை என்றும் புதிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர் என்றும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE