அமெரிக்காவில் பிரதமர் மோடியை வரவேற்ற அதிபர் ஜோ பைடன்

By செய்திப்பிரிவு

கிரீன்வில்லே: குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வகையில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவரை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வரவேற்றார்.

சனிக்கிழமை காலை பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார். இந்நிலையில், அமெரிக்கா சென்றடைந்த அவருக்கு அங்குள்ள இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து டெல்வர் மாகாணத்தின் வில்மிங்டனில் அமெரிக்க அதிபர் பைடன் நீண்ட நாட்களாக வசித்து வரும் இல்லத்தில் அவரை சந்தித்தார்.

அப்போது பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். இருநாட்டு தலைவர்களும் சீனா மற்றும் ரஷ்யா குறித்து இந்த சந்திப்பின் போது பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல இருநாட்டு தலைவர்களும் உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து பேசவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

22 mins ago

உலகம்

2 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

மேலும்