அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக எல்லைகளின் வழியே வரும் அகதிகள், அவர்கள் குழந்தைகளுக்கு பல்வேறுவிதமான கொடுமைகள் இளைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்தக் குழந்தைகளை நிர்வாணமாக்கியும், கைகளைக் கட்டியும், இருட்டு அறைகளில் அடைத்தும் பல்வேறு உரிமை மீறல்கள் நடந்துள்ளன.
விர்ஜினியா மாநிலத்தில் ஸ்டான்டன் நகர் அருகே ஷெனாடோ சிறுவர்கள் காப்பகத்தில் குழந்தைகளின் உரிமை மீறல்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
மெக்சிகோ, மத்திய அமெரிக்கநாடுகளில் இருந்து வரும் அகதிகள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறும் பொருட்டு எல்லைகளைக் கடக்கும் போது போலீஸிடம் சிக்குகின்றனர்.
இவர்களைக் கைது செய்யும் போலீஸார் வயதுவந்த அகதிகளை குடியேற்றச் சிறைகளிலும், அகதிகள் முகாம்களிலும், சிறுவர்களை காப்பகங்களிலும்அடைத்து வருகின்றனர். இதில் போதைமருந்து கடத்தலில் ஈடுபடும் மெக்சிகோ, மத்திய அமெரிக்க நாட்டினர் கடுமையான சட்டத்தின் கீழ் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், எல்லை தாண்டிவரும் மெக்சிகோ, மத்தியஅமெரிக்க நாட்டின் அகதிகளின் பிள்ளைகள் பெற்றோர்களிடம் இருந்து காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களிடம் பல ஆண்டுகளாக பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது தற்போது வெளியாகியுள்ளது.
குறிப்பாக விர்ஜினியா மாநிலத்தில் ஸ்டான்டன் நகர் அருகே ஷெனாடோ சிறுவர்கள் காப்பகத்தில் குழந்தைகளின் உரிமை மீறல்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தக் காப்பகத்துக்குள் சென்றவிட்டு திரும்பிய குழந்தைகள் மேம்பாட்டுச் சிறப்பு அதிகாரி அங்கு அகதிச் சிறுவர்களுக்கு பல்வேறு வகையான உரிமைமீறல்கள் நடப்பதை கண்டுபிடித்துள்ளார். சிறுவர்களை நிர்வாணமாக்குவதும், அவர்களை இருட்டறையில் அடைத்தல், மிகப்பெரிய சுமையை தலையில் வைத்துப் பல மணிநேரம் காத்திருத்தல் போன்ற கொடுமைகள் நடந்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஆனால், அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் காப்பகங்களில் எந்தவகையான விதிமுறை மீறல்களும் நடக்கவில்லை, அகதிச்சிறுவர்கள் மனிதநேயத்துடன் நடத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், எல்லையில் பாதுகாப்பு படையினர் சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றனர், போதை மருந்து கடத்தல் கும்பல்களைக் கைது செய்து கட்டுப்படுத்தி வருகின்றனர் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்துள்ளது சிறுவர்கள் மீதான உரிமை மீறலை நியாயப்படுத்துவது போன்று இருக்கிறது.
இது குறித்து ஷெனாடோ சிறுவர்கள் காப்பகத்தின் வசதிகளை ஆய்வு செய்யும் அதிகாரி கெல்சே வாங் கூறுகையில், இந்த காப்பகத்தில் இருக்கும் சிறுவர்களில் பெரும்பாலானோர் எல்லை வழியாகச் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் போது கைது செய்யப்பட்டவர்கள். அவர்கள் அகதிகளாக வந்தவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் அல்ல. இங்குள்ள சிறுவர்களின் உரிமைகள் மீறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே டெக்ஸாஸ் ட்ரிபியூன் இணையதளம் மற்றும் தி சென்டர் பார் இன்வெஸ்டிகேட்டிவ் ரிபோர்டிங் ஆகியவை இணைந்து நடத்திய ரகசியமான ஆய்வில், அமெரிக்காவில் 12-க்கும் மேற்பட்ட அகதிகளின் குழந்தைகள் காப்பகத்தில் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன, சிறுவர்களுக்கு போதுமான உணவு வழங்கப்படுவதில்லை என்று கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
இந்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப், அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடம் திரும்பி ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில், காப்பகத்தில் வசிக்கும் சிறுவர்கள், குழந்தைகளுக்கு உடல்ரீதியான துன்புறுத்தல், பாலியல்ரீதியான துன்புறுத்தல், பாதுகாப்பு, உணவு ஆகியவற்றிலும் பல்வேறு உரிமை மீறல்கள் நடந்துள்ளன. இந்தக் காப்பகங்களை சிலவற்றை அரசும், பெரும்பாலான காப்பகங்களை மதரீதியான, தொண்டு நிறுவனங்கள்தான் ஏற்று நடத்தி வருகின்றன.
கடந்த 2014-ம்ஆண்டு இதேப்போன்று குழந்தைகள் உரிமைகள் நடப்பது வெளிச்சத்துக்கு வந்தநிலையில், 13 தொண்டு நிறுவனங்கள் மீது புகார் கூறப்பட்டது. ஆனால், அதில் 2 நிறுவனங்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago