வாஷிங்டன்: பிரபல அமெரிக்க பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்டை தான் வெறுப்பதாக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனை தனது ட்ரூத் தள பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
‘அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு தான் எனது வாக்கு’ என டெய்லர் ஸ்விஃப்ட் கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் தளத்தில் தெரிவித்திருந்தார். அவரது அந்த பதிவு அதிக லைக்குகளை பெற்றது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்-டாக் சமூக வலைதளத்தில் சுமார் 400 மில்லியன் ஃபாலோயர்கள் டெய்லர் ஸ்விஃப்டை பின்தொடர்கின்றனர். இந்த சூழலில்தான் அவரை விமர்சித்துள்ளார் ட்ரம்ப்.
Loading...
“நான் டெய்லர் ஸ்விஃப்டை வெறுக்கிறேன்” என ட்ரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இது குறித்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுவொரு மோசமான பிரச்சார உத்தி என்றும் சொல்லியுள்ளனர். அதே நேரத்தில் வலதுசாரியான லாரா லூமருடன் ட்ரம்ப் இணைந்திருப்பதை அவரது சொந்தக் கட்சியினரே விமர்சித்துள்ளனர்.
டெய்லர் ஸ்விஃப்ட் சொன்னது என்ன? - “உங்களைப் போல நானும் விவாதத்தை பார்த்தேன். நான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கிறேன். ஏனென்றால் அவர் உரிமைகளுக்காக போராடுகிறார். அவர் ஒரு நிலையான, திறமையான தலைவர் என நான் நினைக்கிறேன். நாம் குழப்பமில்லாமல், அமைதியான முறையில் வழிநடத்தப்பட்டால் இந்த நாட்டில் இன்னும் பலவற்றை சாதிக்க முடியும் என நான் நம்புகிறேன்.
தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் டிம் வால்ஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மேலும் அவரின் அந்த முடிவால் நான் ஈர்க்கப்பட்டேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago