காசா: காசாவின் மவாசி கடற்கரையோரப் பகுதியைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய அண்மைத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அப்பகுதி ஹமாஸ் தீவிரவாதிகள் முக்கிய கமாண்டோக்கள் சிலர் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் அங்கு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி தொடங்கிய காசா மீதான இஸ்ரேலின் போரில் 40,972 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 94,761 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,139 ஆகும், அதேசமயம் 200-க்கும் அதிகமானோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 11 மாதங்களாக போர் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
காசாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், காசாவில் உள்ள 22 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு ‘அவசர’ உணவு மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுகிறது என்று உலக உணவுத் திட்டம் (WFP- The World Food Programme) அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காசாவின் மசாவி கடற்கரையோரப் பகுதியைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீனத்தின் வாஃபா செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இதில் 40 பேர் உயிரிழந்ததாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மவாசி பகுதி கான் யூனிஸுக்கு தெற்கே உள்ளது. இதனை இஸ்ரேல் பாதுகாப்பான பகுதியை அறிவித்திருந்தது. இருப்பினும் அப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச கண்டனத்தைப் பெற்றுள்ளது.
ஆனால் இஸ்ரேல் ராணுவமோ பொதுமக்கள் வாழும் பகுதி என்றாலும் அங்கிருந்து ஹமாஸ் கமாண்டோக்கள் இயக்குவது உறுதிப்படுத்தப்பட்டதால் வான்வழி கண்காணிப்புக்குப் பின்னர் துல்லியமான ஆயுதங்களைக் கொண்டே தாக்குதல் நடத்தியுள்ளோம் எனத் தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளது.
தாக்குதல் தொடர்பான சமூக வலைதளப் படங்கள் அங்கே பெரும் பள்ளங்கள் உருவாகியிருப்பதைக் காட்டுகிறது, சேதமடைந்த கூடாரங்கள், மக்கள் உடைமைகள் கவலையளிப்பதாக உள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
31 mins ago
உலகம்
2 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago