கராச்சி: தலையில் சிசிடிவி கேமரா பொருத்திய படி பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் வலம் வரும் காட்சி பார்ப்பவர் களை சிரிக்க வைத்துள்ளது.
சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகின்றன. சில வீடியோக்கள் தகவல்கள் நிறைந்ததாகவும், பாராட்டும் வகையிலும் இருக்கும். சில வீடியோக் கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கும். சில வீடியோக்கள் பார்ப் பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். அத்தகைய வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது.
அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தலையில் சிசிடிவி கேமராவுடன் தெருவில் செல்கிறார். இது வித்தியாசமாக இருந்ததால் அந்தப்பெண்ணை ஒருவர் பேட்டி எடுக்கிறார்?தலையில் சிசிடிவி கேமரா ஏன்? எனகேட்டதற்கு அந்தப் பெண் கூறுகையில், ‘‘நான் எங்கு செல்கிறேன், என்ன செய்கிறேன் என்பதை அறிந்து கொள்வதற்காக என் தந்தை இதை பொருத்தியுள்ளார். இது எனக்கு பாதுகாப்பாக உள்ளது. எனது தந்தைதான் எனது பாதுகாவலர். கராச்சியில் தாக்குதல், கொலை, பாலியல் வன்கொடுமை என பல சம்பவங்கள் நடைபெறுவது கவலை யளிப்பதாக உள்ளது. ஆகையால் எனது பாதுகாப்புக்காக இந்த கேமராவை என் தந்தை பொருத்தியுள்ளார். இதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவில்லை’’ என்றார்.
இளவரசிக்கு கிரீடம்: இந்த வீடியோ மற்றும் பேட்டியை பார்த்து பலரும் நகைச்சுவையான கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஒருவர்கூறுகை யில், ‘‘இதெல்லாம் பாகிஸ் தானில் மட்டும்தான் நடக்கும்’’ எனகூறியுள்ளார். மற்றொருவர் பதிவிட்டுள்ள கருத்தில், ‘‘இந்த பெண்ணுக்கு அசம்பாவிதம் ஏதும் நடந்தால், இவரது தந்தை எப்படி காப்பாற்றுவார்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார். இன்னொருவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்தப் பெண் அவரது தந்தையின் இளவரசி. அதனால் அவளுக்கு கிரீடம் சூட்டியுள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago