தந்தை மீது அளவு கடந்த பாசத்தால், அவர் இறந்தபின் சவப்பெட்டியில் வைப்பதற்கு பதிலாக, புதிதாக ரூ.60 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யு காரில் அவரின் உடலை வைத்து மகன் புதைத்த சம்பவம் நடந்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், தலைநகர் அபுஜா அருகே, இகிலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அசுபுக்கி. இவர் வசதியாக தற்போது வாழ்ந்து வருகிறார். ஆனால், சிறுவயதில் இருந்தே, தனது தந்தைக்கு விலை உயர்ந்த கார் வாங்கித் தர வேண்டும், அதை அவருக்கு பரிசாக அளிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால், அது நிறைவேற்றக் காலம் இசைந்து கொடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் அசுபுக்கியின் தந்தை திடீரென மரணமடைந்துவிட்டார். தந்தையின் மறைவை எண்ணி மகன் அசுபுக்கி மிகுந்த வேதனை அடைந்தார். தன்னுடைய ஆசையான, தந்தைக்கு விலைமதிப்புள்ள காரை பரிசளிக்க முடியவில்லை என கண்ணீர்விட்டார்.
தந்தை உயிரோடு இருக்கும் போது விலை உயர்ந்த காரை பரிசளிக்க முடியாவிட்டால் என்ன, அவர் இறந்தபின், அவருக்குக் காரை வழங்க விரும்பினார். இதையடுத்து,உடனடியாக, கார் ஷோருமுக்குச் சென்று, ரூ.60 லட்சத்தில் பிஎம்டபிள்யு கார் ஒன்றை விலைக்கு வாங்கினார்.
தனது தந்தையை சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்வதற்கு பதிலாக, விலை உயர்ந்த இந்த பிஎம்டபிள்யு காரில் வைத்து அடக்கம் செய்ய முடிவு செய்தார். இந்தச் செய்தியை அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் என ஏராளமானோர் திரண்டனர்.
பூமிக்குள் காரை புதைக்க வேண்டும் என்பதால், காருக்கு ஏற்றார் போல் மிகவும் ஆழமான குழியை வெட்டி, அதில் தனதுதந்தையின் உடலை வைத்து அசுபுக்கி அடக்கம் செய்தார்.
தந்தையின் மீதுள்ள பாசத்தால், அவருக்கு வழங்க இருந்த விலை உயர்ந்த கார் பரிசை, இறந்தபின் அவரோடு சேர்த்து மகன் புதைத்துள்ளார்.இந்த காட்சி குறித்த புகைப்படம் சமூகஊடகங்களில் வைரலானது.
இந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பார்த்த அந்த நாட்டு மக்கள் அபுசுக்கிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தும், அதேசமயம், வருத்தமும் தெரிவித்துள்ளனர்.
உங்கள் தந்தையை இழந்தது வருத்தமளிக்கிறது. விலை உயர்ந்த சவப்பெட்டியில் அடக்கம் செய்து, கார்வாங்கிய தொகையை ஆதரவற்றவர்களுக்காகச் செலவு செய்திருக்கலாம் என்று ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சிலர், நைஜீரியாவில் ஏராளமான ஏழை மக்கள் இருக்கிறார்கள் அவர்களின் நலனுக்கு இந்த கார் வாங்கிய பணத்தை அளித்து இருக்கலாம் என்றும், உங்களின் செயல் சுயநலத்தையும், வீண் செலவையும் காட்டுகிறது என்று கண்டித்துள்ளனர்.
இதைபோல கடந்த 2015-ம் ஆண்டு, சீனாவில் எனுகு எனும் நகரில் தாய் மறைந்த பின் அவரின் மகன் புதிதாகவிலை உயர்ந்த ஹம்மர் வகை காரை வாங்கி அதில் வைத்து அடக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago