ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் 2-வது மிகப்பெரிய வைரம் கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

கபோரோன்: ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைரம் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக போட்ஸ்வானா விளங்குகிறது. உலகின் மொத்த வைர உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் இங்கு உற்பத்தியாகிறது.

இந்நிலையில் இங்கு கனடாவின் லூகாரா டைமண்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு சுரங்கத்தில்இருந்து சுமார் 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது உலகின் இரண்டாவது மிகப் பெரிய வைரமாக கருதப்படுகிறது.

1905-ல் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட்கல்லினன் வைரம் உலகின் மிகப்பெரிய வைரமாக கருதப்படுகிறது. இது 9 தனித்தனி கற்களாக வெட்டப்பட்டது. இதில் பல கற்கள் இங்கிலாந்து அரச குடும்பத்து நகைகளை அலங்கரிக்கின்றன. இதன் பிறகு கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய வைரமாக போட்ஸ்வானா வைரம் கருதப்படுகிறது.

போட்ஸ்வானா தலைநகர் கபோரோனில் இருந்து வடக்கே சுமார் 500 கி.மீ. தொலைவில் உள்ளகரோவ் சுரங்கத்தில் இருந்து இந்தவைரம் கண்டெடுக்கப்பட் டுள்ளது. இந்த வைரத்தின் தரம் மற்றும் மதிப்பு பற்றிய விவரத்தை இந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை. என்றாலும் இதன் மதிப்பு 4 கோடி டாலர் வரை (இந்திய ரூபாயில் 335 கோடி) இருக்கலாம் என இங்கிலாந்தை சேர்ந்த நாளேடு ஒன்று தெரிவிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE