உதகை மலர் கண்காட்சியில் ஒரு லட்சம் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த ‘மேட்டூர் அணை’ மாதிரி வடிவம், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான 122-வது மலர் கண்காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியது. வரும் 22-ம் தேதி வரை இக் கண்காட்சி நடைபெறுகிறது. முதல்வர் கே.பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதையொட்டி, முதல்வர் திறந்துவைத்த புதிய கண்ணாடி மாளிகையில், 7 ஆயிரம் மலர்த் தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
மலர் கண்காட்சியின் சிறப்பம்சமாக, ஒரு லட்சம் கார்னேசன் மலர்களைக் கொண்டு 60 அடி நீளம், 20 அடி உயரமுள்ள ‘மேட்டூர் அணை’ மாதிரி, பல வண்ண ஆர்கிட் மலர்களால் வடிவமைக்கப்பட்ட பார்பி பொம்மை ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு மலர்களின் அணிவகுப்பு, நீலகிரி மாவட்டத் தில் உற்பத்தியாகும் கொய்மலர் அலங்காரம், அரிய வகை மலர்ச் செடிகளின் தொகுப்பு, 9 முகப்பு மலர் அலங்கார வளைவுகள், பல்வேறு மலர்களின் அலங்காரங்கள், நெதர்லாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டூலிப்ஸ் மலர்கள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.
5 நாட்கள் நடக்கிறது
நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருவதால், வெப்பநிலை குறைந்து, ரம்மியமான காலநிலை நிலவுகிறது.
இந்த ஆண்டு முதன்முறை யாக மலர் கண்காட்சி 5 நாட்கள் நடக்கிறது. இதனால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 நாட்களில் சுமார் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை பார்வையிடுவார்கள் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
டிக்கெட்டுக்கு பதிலாக ‘பாஸ்’
சமவெளிப் பகுதிகளில் இருந்து உதகைக்கு சென்றுவர, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
உதகை அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் கணேஷன் கூறும்போது, ‘‘அரை மணி நேரத்துக்கு ஒருமுறை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுற்றுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தப் பேருந்துகளில் செல்பவர்களுக்கு டிக்கெட்டுக்கு பதிலாக ‘பாஸ்’ வழங்கப்படுகிறது. இந்த பாஸ் வைத்துள்ள பயணிகள், அதில் குறிப்பிட்டுள்ள இடங்களுக்கு செல்லலாம்.
ஒரே பேருந்தில்தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சுற்றுலா தலத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, மீண்டும் அந்த வழியாக வரும் வேறு பேருந்தில் ஏறி அடுத்த சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம். உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா சந்திப்பு, படகு இல்லம், மரவியல் பூங்கா, சிறுவர் பூங்கா மற்றும் தொட்டபெட்டா சந்திப்பு, அதன் அருகே உள்ள தேயிலை பூங்கா வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது 5 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்’ என்றார்.
காவிரி பிரச்சினையில் வெற்றி
மலர் கண்காட்சியை தொடங்கிவைத்த பிறகு, செய்தியாளர்களிடம் முதல்வர் கே.பழனிசாமி கூறியபோது, ‘‘மலர் கண்காட்சியை தொடங்கிவைத்து, 2 நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். தேயிலைக்கு மானியம் நிர்ணயம் செய்யப்பட்டு, கூட்டுறவு சங்க தேயிலை விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்படும்.
காவிரி பிரச்சினையில் எம்ஜிஆர் காலத்தில் தொடங்கப்பட்ட சட்டப் போராட்டத்தில், உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங் கும் நிலையில் உள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தீர்ப்பு அமையும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. எனவே, விவசாயிகள், தமிழக மக்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.
விழாவில், அமைச்சர்கள் துரைக்கண்ணு, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சரோஜா, செல் லூர் கே.ராஜு, நீலகிரி எம்.பி.சி.கோபாலகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் ஆர்.கணேஷ் (உதகை), சாந்தி ஏ.ராமு (குன்னூர்) உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago