சிரியாவுக்கு 1,400 கிலோ புற்றுநோய் எதிர்ப்பு மருந்து: இந்தியா மனிதாபிமான உதவி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மனிதாபிமான உதவியாக சிரியாவுக்கு இந்தியா 1,400 கிலோ புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை அனுப்பியுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில்,“மனிதாபிமான அடிப்படையில் சிரியாவுக்கு இந்தியா உதவிகள்வழங்கி வருகிறது. தற்போது புற்றுநோயை எதிர்கொள்ள சிரியாஅரசுக்கும் மக்களுக்கும் உதவும் நோக்கில் இந்தியா 1,400 கிலோ புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை அனுப்பியுள்ளது” என்று கூறப் பட்டுள்ளது.

இந்தியாவும் சிரியாவும் நட்பு நாடுகள் ஆகும். சிரியாவின் உள்நாட்டுப் போர் சமயத்தில் அங்கு இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தது. சிரியாவின் இளைஞர்களின் மேம்பாட்டுக்கு இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

குறிப்பாக, இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் சிரியா இளைஞர்களுக்கு உதவித் தொகை மற்றும் பயிற்சி வழங்கி இந்தியா உதவியுள்ளது.

இந்நிலையில், சிரியாவுக்கு மருத்துவ ரீதியாக உதவும் நோக்கில், புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை இந்தியா அனுப்பியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE