வெனிசுலா அதிபராக ஜக்கிய சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
வெனிசூலாவில் கடந்த 1999 முதல் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த 2013-ல் அப்போதைய அதிபர் சாவேஸ் காலமானதைத் தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோ புதிய அதிபராக பதவியேற்றார்.
கடந்த சில வருடங்களாகவே மதுராவுக்கு எதிராக வெனிசுலாவில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவரது அரசுக்கு எதிராக கடந்த ஏப்ரலில் கிளர்ச்சி ஏற்பட்டது. இந்த போராட்டங்களில் 120-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதிபர் மதுரோ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்த நிலையில் வெனிசுலாவில் நடைபெற்ற தேர்தலில் நிக்லோஸ் மதுரவை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்றி பால்கோன்னுக்கு 21.2% சதவீத வாக்குகளும், மதுராவுக்கு 67% வாக்குகளும் கிடைத்தன.
இதனைத் தொடர்ந்து நிக்கோலஸ் மதுரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் எதிர்க்கட்சி தேர்தல் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
வெற்றி பெற்றது குறித்து ஆதாரவாளர்களிடம் மதுரா கூறும்போது, அவர்கள் என்னை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். இது ஒரு வரலாற்று வெற்றி. ஒரு அழகான வெற்றி நாள் ஒரு உண்மையான கூட்டத்தின் வெற்றி நாள். ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது! அமைதி வெற்றிகண்டது! அரசியலமைப்பு, அரசியலமைப்பு, சட்டபூர்வமான முறையிலேயே இந்த தேர்தல் நடைபெற்றது” என்றார்.
இதை மிஸ் பண்ணிடாதீங்க
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago