வங்கதேசத்தில் மேலும் ஒரு கோயில் மீதான தாக்குதலை முறியடித்த இந்துக்கள்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: வங்கதேசத்தில் இந்து கோயில்கள், இந்துக்களின் வீடுகள், கடைகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோயில் துணை தலைவர் ராதாராமன் தாஸ்நேற்று கூறும்போது, “வங்கதேசத்தில் உள்ள ஒரு கோயில் மீதுசெவ்வாய்க்கிழமை போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கோயிலும் அதில் இருந்தசிலைகளும் முற்றிலும் சேதமடைந்தன. மேலும் கோயிலில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுபோல் மற்றொரு கோயில் மீது தாக்குதல் நடத்த ஒரு கும்பல் முயற்சி செய்தது. ஆனால், அந்தக் கோயில் பகுதியில் திரண்டிருந்த ஏராளமான இந்துக்கள் அவர்களை விரட்டியடித்தனர். இதனால்தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது” என்றார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, “இந்தியாவுக்கு பக்கத்தில் உள்ளநாடுகள் அனைத்தும் பற்றி எரிகின்றன. அங்குள்ள கோயில்கள் இடிக்கப்படுகின்றன. இந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனாலும் இத்தகைய சூழல் ஏன் ஏற்படுகிறது என்பதைகண்டறிய நாம் முயற்சிக்கவில்லை. வரலாற்றின் தவறுகளிலிருந்து பாடம் கற்காத சமூகத்தின் ஒளிமயமான எதிர்காலம் மறைந்துவிடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சனாதன தர்மத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை சமாளிக்க நாம் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

10 days ago

மேலும்