“என்னிடம் மன்னிப்புக் கோரினார் மார்க் ஸக்கர்பெர்க்” - ட்ரம்ப் தகவல்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: "ஃபேஸ்புக்கில் என்னை தடை செய்ததற்காக அதன் இணை நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், என்னிடம் மன்னிப்புக் கோரினார்" என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், மார்க் ஸக்கர்பெர்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை ஆதரிக்கப் போவதில்லை என்றும் உறுதியளித்ததாக ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு டொனால்ட் ட்ரம்ப் அளித்த பேட்டியில், "மார்க் ஸக்கர்பெர்க் என்னை அழைத்திருந்தார். ஃபேஸ்புக்கில் என்னை தடை செய்த நிகழ்வுக்கு பிந்தைய அழைப்பு இது. உண்மையில் மார்க் ஸக்கர்பெர்க் ஜனநாயக கட்சி வேட்பாளரை ஆதரிக்கப் போவதில்லை என்று என்னிடம் உறுதியளித்தார். ஏனென்றால், அன்று ஃபேஸ்புக்கில் என்னை தடை செய்த பின் நான் செய்ததற்கு அவர் என்னை மதிக்கிறார். என் மீது மரியாதை வைத்திருப்பதால் அவரால் ஜனநாயக கட்சி ஆதரவளிக்க முடியாது.

ஃபேஸ்புக் தடை விவகாரத்தை பொறுத்தவரை அவர்கள் தங்களின் பணியினைச் செய்திருக்கிறார்கள். எனினும் அதனைச் சரிசெய்தார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்