ஜ
ப்பானின் மிசோ நகரில் வசிக்கும் ஹிரோகா, மருத்துவமனையில் வழங்கப்பட்ட உணவுகளின் படங்களையும் குறிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். நட்சத்திர விடுதியில் கிடைக்கும் உணவுகளைப் போன்று இருக்கும் படங்களைப் பார்த்து ஆச்சரியப்படாதவர்களே இல்லை. “ஒபி-ஜிஒய்என் குழந்தை பிறப்புக்கான மருத்துவமனை. இது சிறிய மருத்துவமனைதான். ஆனால் அங்கு வழங்கப்படும் விதவிதமான உணவுகளும் ருசியும் நட்சத்திர விடுதிகளில் கூட கிடைக்காது. குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒருவிதமான உணவுகளை வழங்குகிறார்கள். பிறந்த பின்பு வேறுவிதமான உணவுகளைக் கொடுக்கிறார்கள். எல்லாமே அவ்வளவு ருசி. குழந்தை பிறந்த இரண்டாவது நாளே வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டனர். எனக்கு மருத்துவமனையில் இன்னும் சில நாட்கள் இருந்து, சாப்பிட வேண்டும் என்று ஆசை. அதனால் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டேன். மேலும் சில நாட்கள் ரசித்து, ருசித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். பொதுவாக மருத்துவமனைகளில் வழங்கப்படும் உணவை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் இங்கே சாப்பிட்ட பிறகு வேறு எந்த உணவும் ருசியாகத் தெரியவில்லை” என்கிறார் ஹிரோகா.
அட, நாக்கில் நீர் ஊறுதே!
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
1 hour ago
உலகம்
15 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago