சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு; 75 பேர் மீட்பு

By செய்திப்பிரிவு

பெய்ஜீங்: தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த சுமார் 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சீனாவிவ் சிச்சுவான் மாகாணத்தின் ஜிகோங் நகர் பகுதியில் 14 மாடிகள் கொண்ட வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்துக்கு அதிகப்படியான மக்கள் வந்துசெல்வது வ்ழக்கம். இந்நிலையில் நேற்று இரவில் (புதன்கிழமை) இங்கு ஒரு மாடியில் இருந்து கரும்புகையுடன் தீ பரவியது. இது குறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தீயணைப்பு படையினர் பலர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சம்பவ இடத்தில் 16 பேர் பலியாகினர். மீட்புப் பணி இன்று (வியாழக்கிழமை) நிறைவடைந்தது. கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த சுமார் 75 பேர் மீட்கப்பட்டதாக உள்ளூர் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணைகளின் படி, கட்டுமான பணியின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, நான்ஜிங் நகரில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE