ஓமன் மசூதி துப்பாக்கி சூட்டில் இந்தியர் உட்பட 6 பேர் உயிரிழப்பு; 28 பேர் காயம்

By செய்திப்பிரிவு

மஸ்கட்: கடந்த ஜூலை 15-ம் தேதி (திங்கள்) இரவு, ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஷியாமுஸ்லிம்களுக்கான இமாம் அலிமசூதி அருகில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு துப்பாக்கி சூடுநடத்தியது. இதில் ஒரு இந்தியர், நான்கு பாகிஸ்தானியர்கள், காவல்துறை அதிகாரி ஒருவர் என 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்தனர். அல்-வாடி அல்-கபீர் பகுதியில் நடந்த சம்பவத்தின்போது தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இது தொடர்பாக மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: கடந்த ஜூலை 15-ம் தேதி மஸ்கட் நகரில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவத்தை தொடர்ந்து ஓமன்வெளியுறவு அமைச்சகம், ஒரு இந்தியர் உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளது. தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தூதரகம் தயாராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE