ஓமன் கடலில் கவிழ்ந்த எண்ணெய் டேங்கர்: 13 இந்தியர்கள் உட்பட 16 மாயம்

By செய்திப்பிரிவு

மஸ்கட்: ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்துள்ளது. அதன் பணியாளர்கள் 16 பேர் மாயமாகி உள்ளனர்.. இதில் 13 பேர் இந்தியர்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்.

இதனை ஓமன் கடல் பாதுகாப்பு மையம் உறுதி செய்துள்ளது. ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ எனும் இந்த டேங்கரில் இலங்கையை சேர்ந்த 3 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 13 பேர் பணியாற்றி உள்ளனர். திங்கட்கிழமை அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் டுக்ம் துறைமுகத்துக்கு அருகே கப்பல் கவிழ்ந்தது.

கடலில் கப்பல் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் எண்ணெய் கசிவு குறிந்த எந்த தகவலும் உறுதி இன்னும் செய்யப்படாமல் உள்ளது. 117 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் குறுகிய கடல் பயணத்துக்கானது.

டுக்ம் துறைமுகம் ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இது அந்த நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் சார்ந்து முக்கிய அங்கமாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE