பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.2 ஆக பதிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தென் ஆப்பிரிக்க நாடான பெருவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், சேதம் குறித்து உடனடி தகவல் இல்லை.

இது தொடர்பாக அமெரிக்கப் புவியியல் நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், பெருவின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது நள்ளிரவு 12.,36 மணிக்கு ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அட்டிகிபா (Atiquipa) மாகாணத்தில் இருந்து 8.8 கிலோ மீட்டர் (5.5 மைல்) தொலைவில் இந்த நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.. நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள பகுதிகளில் வலுவான நடுக்கம் உணரப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், சேதம் குறித்து உடனடி தகவல் இல்லை.

நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். அதன் பிறகு இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், நிலநடுக்கதின்போது பதிவான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பெரு ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்களால் தாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

மேலும்