குழந்தையை காப்பாற்றியதால் ‘ஸ்பைடர்மேனுக்கு’ வாழ்க்கையே திசை திரும்பியது: நெகிழச் செய்த பிரான்ஸ்

By ஏஎஃப்பி

பாரீஸ் நகரில் 4 அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் தொங்கி உயிருக்குப் போராடிய குழந்தையைக் காப்பாற்றிய மாலி நாட்டு இளைஞருக்குக் குடியுரிமையும், அரசு வேலையும் வழங்கி பிரான்ஸ் அரசு கவுரவித்துள்ளது.

ஆப்பிரிக்காவின் மாலி நாட்டைச் சேர்ந்தவர் மமுடு கசாமா(வயது22). மத்தியதரைக்கடல் பகுதியில் இத்தாலி வழியாக பிரான்ஸ்நாட்டுக்குள் சட்டவிரோதமாக அகதியாக நுழைந்தவர் கசாமா. இவருக்கு 3 மாதங்கள் தங்கி இருந்து பணிபுரிய அனுமதிவழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பாரீஸ் நகரின் பரபரப்பான பகுதியில் 4 அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து ஒரு 3 வயது குழந்தை தவறி விழும் வகையில் தொங்கியபடி இருந்தது. அந்தப் பகுதியில் நின்றிருந்த கசாமா, இதைப்பார்த்தவுடன் மின்னல் வேகத்தில் எந்தவிதமான கருவிகளின் உதவியின்றி, ஸ்பைடர்மேன் போல், அந்தக் குடியிருப்பின் மீது ஏறினார். சில நிமிடங்களில் குடியிருப்பின் 4-வது மாடிக்குச் சென்று அந்தக் குழந்தையை பாதுகாப்பாக மீட்டார்.

கசாமாவின் வீரச்செயலை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் வீடியோ எடுத்து அதைச் சமூக ஊடகங்களில் பரப்பினார்கள். இதற்கு பிரான்ஸ் மக்கள் கசாமாவை மனமாரப் பாராட்டினார்கள்.

இந்த வீடியோவைப் பார்த்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மாலி இளைஞர் கசாமாவை நேற்று நேரில் அழைத்துப் பாராட்டி, வீரதீர செயலுக்கான விருதையும் பாராட்டு பத்திரத்தையும் வழங்கினார். மேலும், அவருக்கு பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை வழங்குவதாகவும், அரசின் தீயணைப்பு துறை பணியில் சேர்க்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், கசாமாவுக்கு இன்று பிரான்ஸ் அரசு அதிகாரப்பூர்வமாகக் குடிமகனாக ஏற்றுக்கொண்டு அவருக்கு குடியரிமைக்கான சான்றிதழை வழங்கியது.

அதுமட்டுமல்லாமல், தீயணைப்பு துறையில் 10 மாதங்களுக்கான பயிற்சியிலும் சேர்வதற்கான அனுமதிக் கடிதத்தையும் அளித்தது. மாதம் ரூ.46 ஆயிரம்(590டாலர்) பயிற்சி ஊதியத்தில் கசாமா தீயணைப்பு துறையில் சேர உள்ளார்.

இதற்கிடையே குழந்தையை சரிவர பராமரிக்காத குழந்தையின் தந்தையைக் கைது செய்த போலீஸால் இன்று ஜாமீனில் விடுதலை செய்தனர்.

இது குறித்து கசாமாவின் வளர்ப்பு பாட்டி வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், உண்மையில் கசாமா ஒரு ஹீரோ. அவன் குழந்தை உயிருக்கு போராடுவதைப் பார்த்தவுடன் தாமதிக்காமல் சென்று காப்பாற்றியுள்ளான். என் அன்பு பேரன். உண்மையில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய கசாமாவுக்கும், கடவுளுக்கும்தான் நன்றி சொல்லவேண்டும் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே பிரான்ஸ் அதிபர் மெக்ரானைச் சந்தித்த கசாமா கூறுகையில், நான் குழந்தை உயிருக்கு போராடி பால்கனியில் தொங்குவதைப் பார்த்தவுடன் என் மனதில் காப்பாற்றலாமா வேண்டாமா என்ற இரட்டைசிந்தனை வரவில்லை. எப்படியாவது குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இருந்தது எனத் தெரிவித்தார். இதைக் கேட்ட அதிபர் மெக்ரான் மனமார கசாமாவைப் பாராட்டியுள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

மேலும்