சென்னை: அண்டை நாடான பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவின் வசம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIRPI) என்ற ஸ்வீடன் நாட்டு நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையை நேற்று (ஜூன் 17) அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில் உலக நாடுகளின் வசம் உள்ள அணு ஆயுதம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, இஸ்ரேல் ஆகிய ஒன்பது உலக நாடுகள் அணு ஆயுத சக்தியை கொண்டுள்ளன. அந்த வகையில் இந்த நாடுகளின் வசம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை ஆண்டுதோறும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியாவின் கைவசம் உள்ள நியூக்கிலியர் வார்ஹெட்டின் எண்ணிக்கை 172 என உள்ளது. இது கடந்த ஜனவரி மாத கையிருப்பின் தகவல். பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதத்தின் எண்ணிக்கை 170 என உள்ளது.
» “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை” - தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு
» ஒடிசா போல் தமிழகத்திலும் நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை
கடந்த 2023-ல் இந்தியா தனது அணு ஆயுதங்களை விரிவு செய்ததாகவும், இதற்கு நவீன முறையை பின்பற்றியதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நீண்ட தூரத்தில் உள்ள இலக்கை எட்டும் வகையில் அணு ஆயுதம் சார்ந்த மேம்பாடுகளை இந்தியா மேற்கொண்டு உள்ளதாகவும் தகவல்.
உலகளவில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் வசம் அணு ஆயுதங்கள் அதிகம் உள்ளன. மேலும், உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுத கையிருப்பில் சுமார் 90 சதவீதத்தை இந்த இரண்டு நாடுகளும் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பிடும் போது சீனாவின் வசம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது.
கடந்த ஓராண்டில் உலக நாடுகளின் வசம் ஒட்டுமொத்தமாக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சுமார் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்காக கடந்த ஓராண்டில் மட்டும் உலக நாடுகள் சுமார் 91.3 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளன. இதில் கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா சுமார் 2.7 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. முதலிடத்தில் உள்ள அமெரிக்கா 51.5 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள சீனா 11.9 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.
உலக அளவில் தற்போது ஆக்டிவாக உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 9,585 என உள்ளது. இதில் சீனா வசம் சுமார் 500 அணு ஆயுதங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 410 என இருந்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago