ரஷ்ய அதிபராக 4-வது முறையாக புதின் இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்றுக் கொண்டார்.
பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட கிரெம்ளின் மஹாலில் நடைபெற்ற புதினின் அதிபர் பதவி ஏற்பு விழாவில், சுமார் 5,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
புதின் தனது அலுவலகத்திலிருந்து வெளியேறி பதவி ஏற்பு விழா நடைபெறும் கிரெம்ளின் மஹாலுக்கு செல்லும் காட்சிகளை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
பதவி ஏற்பு விழாவில் புதின் பேசும்போது, "நாட்டை அனைத்து துறையிலும் முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லும் அனைத்து வாய்ப்புகளும் நம்மிடம் உள்ளன" என்றார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் புதின் 75 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். எனினும் இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டன.
கடந்த 1999-ல் அப்போதைய ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின், அன்றைய பிரதமர் செர்ஜி ஸ்டாபாசினை பதவி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து ரஷ்ய உளவு அமைப்பான கேஜிபியின் முன்னாள் உளவாளி விளாடிமிர் புதினை பிரதமராக அவர் நியமித்தார். 1999 டிசம்பரில் போரிஸ் எல்ட்சின் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது செயல் அதிபராக புதின் பொறுப்பேற்றார்.
பின்னர் 2010 மார்ச்சில் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் மீண்டும் அதிபர் ஆனார். 2008-ல் பிரதமராக பதவியேற்றார். பின்னர் 2012-ல் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக அதிபரானார். இந்த நிலையில் மீண்டும் அதிபராக புதின் பதவி ஏற்றிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago