6 மாதங்களுக்குப் பிறகு பொதுவெளியில் பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன்!

By செய்திப்பிரிவு

லண்டன்: பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன், தனக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக ஆறு மாதங்களுக்கு முன்னர் தெரிவித்தார். அதன் பிறகு முதல் முறையாக அவர் தற்போதுதான் பொதுவெளியில் வருகை தந்துள்ளார்.

42 வயதான அவர், பிரிட்டனின் வில்லியம்ஸின் மனைவி ஆவார். ஜனவரி மாதம் மருத்துவமனையில் இரண்டு வார காலம் அவர் சிகிச்சையில் இருந்தார். தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் அவர் உறுதி செய்திருந்தார்.

இந்தச் சூழலில் இன்று (சனிக்கிழமை) காலை லண்டன் நகரின் சாரல் மழைக்கு மத்தியில் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தனது மூன்று குழந்தைகளுடன் கேட் பயணித்தார். மன்னர் மூன்றாம் சார்லஸின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து புறப்பட்ட பவனியில் அவர் கலந்து கொண்டார். இதில் அவரது கணவரும் பங்கேற்றார். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், தனது குடும்பத்துடன் இந்த விழாவை கண்டு களித்தார்.

“இன்னும் நோய் பாதிப்பில் இருந்து மீளவில்லை. சிறந்த மற்றும் மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகிறேன். எனது உடல் நலனில் முன்னேற்றம் கண்டு வருகிறேன். எப்படியும் அடுத்த சில மாதங்கள் இந்த சிகிச்சை தொடரும்” என இளவரசி கேத் தெரிவித்திருந்தார்.

கடந்த 1760 முதல் ஆண்டுதோறும் பிரிட்டிஷ் மன்னரின் பிறந்தநாள் அணிவகுப்பு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு உட்பட சில நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE