ஓபன் AI + ஆப்பிள் கூட்டு | ஆப்பிள் சாதனங்களுக்கு எனது கம்பெனிகளில் தடை: மஸ்க் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிளின் டெவலப்பர் மாநாட்டில் (WWDC) ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்துடன் இணைவது குறித்து ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. அது ஏனோ எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்கை ஈர்க்கவில்லை. மேலும், இது தொடர்பாக அவர் எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

ஆப்பிள் நிறுவன சாதனங்களான ஐபோன், மேக் போன்றவற்றின் இயங்குதளத்தில் ‘ஓபன் ஏஐ’ டூல்கள் பயன்பாட்டுக்கு வந்தால், அந்த சாதனங்களை எனது நிறுவனங்களில் பயன்படுத்த தடை விதிப்பேன் என தெரிவித்தார். இதனை ஆப்பிள் சிஇஓ டிம் குக், பகிர்ந்த ட்வீட்டில் பதில் ட்வீட் செய்து ம்ஸ்க் தெரிவித்திருந்தார்.

மேலும், ஆப்பிள் சாதன பயனர்களின் தரவு சார்ந்த விவரங்களை இதன் மூலம் ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்கிறது என்றும் விமர்சித்திருந்தார். ஓபன் ஏஐ, அதன் ‘சாட் ஜிபிடி’ ஜெனரேட்டிவ் ஏஐ மாடலை டிரெயின் செய்ய பிரைவேட் டேட்டாவை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு இது ஆப்பிள் பயனர் பிரைவசியில் பின்னடைவாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தால் சுயமாக ஏஐ பணியில் ஈடுபட முடியாதது குறித்தும் பேசியுள்ளார்.

ஆப்பிள் மற்றும் ஓபன் ஏஐ நிறுவனம் இணைவது குறித்து எக்ஸ் தளத்தில் பயனர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் ஆல்ட்மேன் பதிவட்ட எக்ஸ் பதிவிலும் இது குறித்து மஸ்க் கமெண்ட் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE