மாஸ்கோ: ரஷ்ய நாட்டில் மருத்துவம் பயின்று வந்த நான்கு இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே அமைந்துள்ள ஆற்றில் நடந்துள்ளது. அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் வகையில் ரஷ்ய நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இந்திய அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
உயிரிழந்த நான்கு மாணவர்களில் இருவர் பெண்கள். அவர்கள் அனைவருக்கும் 18 முதல் 20 வயது இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள வெலிகி நோவ்கோரோட் (Veliky Novgorod) நகரின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்துள்ளனர்.
வோல்கோவ் ஆற்றில் மாணவி ஒருவர் முதலில் சிக்கியுள்ளார். அவரை காக்கும் வகையில் அவருடன் நான்கு பேர் ஆற்றில் இறங்கியுள்ளனர். அதில் ஒருவரை அங்கிருந்தவர்கள் மீட்டுள்ளனர். மற்ற அனைவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனை அந்த நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
“உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் வசம் ஒப்படைக்கும் வகையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அவர்களை பிரிந்துள்ள குடும்பத்துக்கு எங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு இந்நேரத்தில் வேண்டிய அனைத்து உதவியையும் வழங்குவோம். பத்திரமாக மீட்கப்பட்ட மாணவருக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்” என மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.
» பாகிஸ்தான் தோல்வியை வடிவமைத்த மும்பை கம்ப்யூட்டர் இன்ஜினியர் நெட்ராவல்கர்
» “எங்களை விட அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டது” - பாபர் அஸம்: T20 WC
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago