ஏமனில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 20 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில் ”ஏமனில் வடமேற்கு மாகாணமான ஹஜ்ஜவில் ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதலில் திருமண நிகழ்ச்சி பாதிப்புக்குள்ளானது. இதில் 20 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வான்வழித் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று சவுதி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. ஏமனில் சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago