மீம்ஸ் மூலம் பிரபலமடைந்த ‘கபோசு’ நாய் மரணம்: நெட்டிசன்கள் கண்ணீர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மீம்ஸ் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ‘கபோசு’ நாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. கபோசுவின் மறைவுக்கு உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் தங்களுடடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

உலகம் முழுவதும் மீம்ஸ் மூலம் பிரபலமான விஷயங்களில் கபோசு (Kabosu) நாயும் ஒன்று. அந்த அளவுக்கு பல ரியாக்சன்களை கொடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்நிலையில் கபோசு நாய் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 7:50 மணியளவில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. 18 வயதான கபோசு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரமான செய்தியை கபோசுவின் உரிமையாளர் தனது சமூக வலைதள பக்கத்தில், “வழக்கம் போல நேற்று இரவு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு தூங்குச் சென்ற கபோசு தூக்கத்திலேயே உலகத்தை விட்டு பிரிந்தது. உலகத்தில் அதிக அன்பை பெற்றுக்கொண்ட நாய் என்றால் அது கபோசு தான். அதைப்போல, அவளைப் பெற்ற மகிழ்ச்சியான நபர் நான் தான். இத்தனை வருடங்களாக கபோசுவை நேசித்ததற்காக உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி” எனப் பதிவிட்டுள்ளார். அதோடு, மே 26-ம் தேதி இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கபோசுவின் மறைவுக்கு உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் தங்களுடடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

2008 ஆம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த ஒருவர் இந்த நாயை வளர்த்து வந்த நிலையில், இதனை வைத்து 2010-ஆம் ஆண்டு போட்டோ ஷூட் செய்து அதனை வெளியிட்டபோது பிரபலமாக தொடங்கியது.

அதன்பிறகு, இந்த நாய் கொடுத்த ரியாக்ஸன் மூலம் மிகவும் வைரலாக 2013ம் ஆண்டில் இதனுடைய படத்தை அதன் லோகோவாகப் பயன்படுத்தி கிரிப்டோ கரன்சியான Dogecoin உருவாக்கவும் தூண்டியது என்பதும் கவனிக்கத்தக்கது.

எலான் மஸ்க் எக்ஸ் சமூக ஊடக நிறுவனத்தை வாங்கிய பின், முன்பு இருந்த பறவை லோகோவை மாற்றினார். பின்னர் இந்த கபோசு லோகோவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

மேலும்