ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு - காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

ஹன்ட்லோவா: பொதுமக்கள் மத்தியில் அடையாளம் தெரியாத நபரால் ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது . இதில் காயமடைந்த பிரதமர் ராபர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்லோவாகியாவின் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பின் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காயமடைந்த பிரதமர் ராபர்ட் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீஸார் மடக்கி பிடித்தனர்.

அடையாளம் தெரியாத அந்த நான்கு முறை துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் காயமுற்ற பிரதமர் ராபர்ட் சுருண்டு தரையில் விழுந்ததாகவும் நேரில் பார்த்த நபர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். முதல்கட்ட தகவலின்படி, பிரதமர் ராபர்ட்டுக்கு தலையிலும், மார்பு பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தவுடனேயே பிரதமரின் பாதுகாவலர்களில் இருவர் அவரை பத்திரமாக மீட்டு காரில் உட்கார வைத்தனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஸ்லோவாக்கியாவில் கடந்த செப்டம்பரில் பிரதமராக ராபர்ட் ஃபிகோ மீண்டும் ஆட்சிக்கு வந்தார். முதல் சில மாதங்கள் அவரின் ஆட்சி சர்ச்சைகளை எதிர்கொண்டது. உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்தியது, அரசு தொலைக்காட்சி மற்றும் ரேடியோ ஒளிபரப்பை நிறுத்தியது என அவரது அரசின் முடிவுகள் சர்ச்சைகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

2 days ago

மேலும்