நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதல்: 18 பேர் பலி

By ஏஎஃப்பி

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். 84 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ’’நைஜீரியாவில் வடகிழக்குப் பகுதியின் மைதுகுரி நகரத்தில் அமைந்துள்ள ராணுவ முகாமில் போகோ ஹராம் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதில் நைஜீரியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 9 வீரர்கள் உட்பட 18 பேர் பலியாகினர். அவர்களது உடல்கள் பேல் ஷுவாம் பேல் குரா ஆகிய பகுதிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. மேலும் இந்த தீவிரவாதத் தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 84 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் போகோ ஹராம் ஐஎஸ் அமைப்பின் கிளை அமைப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

நைஜீரியாவில் ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போகோ ஹராம் தீவிரவாதிகள் அந்நாட்டில் தங்கள் தாக்குதலை சமீபத்தில் அதிகப்படுத்தியுள்ளனர்.

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதல்கள் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்